அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா
கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட முதலாவது, அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா இன்று (03) கடற்படை தலையமையகத்தில் நடாத்தப்பட்டது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் திருமதி மோனிகா பெர்னாண்டோ அவர்களால் சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னால் கடற்படை தளபதி அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ, சேவையின் போது படுகொலை செய்யப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளின் மிக மூத்த அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ, பிரதான பணிப்பாளர்கள், கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதள்களும் பெறுமதியான பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பரிசு பெற்றோர் விபரம்.
கொமாண்டர் மற்றும் அதற்கு மேல் நிலை (ஆங்கில மொழி மூலம்)
1ம் இடம் - கொமாண்டர் (ஏஈஸ்டப்) கெ பி எஸ் பி கொடிப்பிலி
2ம் இடம் – கெப்டன் (பொறியியல்) எச் கெ தசனாயக
3ம் இடம் – கொமாண்டர் (கனறி) எ எ சி கருணாசேன
லெப்டினன்ட் கமான்டர் மற்றும் அதற்கு கீழ் நிலை (ஆங்கில மொழி மூலம்)
1ம் இடம் – லெப்டினன்ட் கொமாண்டர் கெ கெ சி உதயங்க
2ம் இடம் – லெப்டினன்ட் கொமாண்டர் (சட்ட சேவை) டி என் அமரவன்ஷ
3ம் இடம் - லெப்டினன்ட் கொமாண்டர் (கனறி) எஸ் எ சி ஆர் குலதுங்க
ஏனையா நிலைகள் (சிங்கள மொழி மூலம்)
1ம் இடம் – பிரதான சிறு அதிகாரி (எழுதுவிளைஞர்) பி கெ யு திஸ்ஸ
2ம் இடம் – கப்பல படை பிரதான சிறு அதிகாரி (ரோந்து) ஜி ஜி எ பண்டா
3ம் இடம் – திறமையுல்ள மாலுமி எம் எ எஸ் டி குமார
இக்கட்டுரை போட்டி கடற்படையினரிடையே எழுத்து திறனை விருத்தி செய்யும் நோக்கில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் கட்டளைக்கமைய அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டி எனும் பெயரில் 2015 ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.