பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் போட்டி - 2016 குச்சவெளி, கடற்படை கப்பல் வழகம்பா கடற்கரையில் ஜூலை மாதம் 16ம் திகதி நடாத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களின் தலைமையில் முப்படைக்களைச் சேர்ந்த பல போட்டியாளர்கலின் பங்கேற்புடன் நடந்த இப்போட்டியில் இலங்கை கடற்படை
செம்பியன்சிப் விருதை வென்றது. பிரதி பிரதேச கட்டளை தளபதி கொமொடோர் மெரில் சுதர்ஷன உட்பட பல முப்படை அதிகாரிகளும் பெரும் திரலான விளையாட்டு வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.