இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் அமைச்சுக்களிடையே 02 புரிந்து ஓப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களம் இணைத்து(Vessel Monitoring System - VMS) இட்டு புரிந்து ஓப்பந்தம் மற்றும் சர்வதேச நீர் நிலை ஆய்வியல் கடல் ஓவியம் வரையில் புரிந்து ஓப்பந்தம் நேற்று 21 கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சுயில் கைச்சாத்திட்டனர். அதன்படி முதலாம் ஓப்பந்தம் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கடற்றொழில் அமைச்சின் சார்பில் அவ்வமைச்சின் செயலாளர் திருமதி. மல்லிகா அதிகாரிகம அவர்களும் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, தேசிய நீரியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் தலைவர் டாக்டர் அனில் பிரேமரத்ன ஆகிடோரிடையே மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வொப்பந்த்தத்தின் கீழ் ஆட்கடத்தல், சட்டவிரோதமாக மீன்பிடித்தல், போதை மருந்து கடத்தல் மற்றும் மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் என்பனவற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் அறிவுரைகளுக்கமைய இலங்கை கடற்படையானது கடற்றொழில் அமைச்சுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கை கடற்படையானது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாட்டின் கடல் எல்லை தொடர்பாக மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் என்பனவற்றை வழங்கவுள்ளது, மேற்படி நிகழ்வில், இரு அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.