இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
ஜப்பானிய "உரக" மற்றும் "தக்சிமயேயமா" எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று (மேய்,11) வந்தடைந்துள்ளன வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
இதைவேலை, ஜபானிய கடற்படையின் 51வது கப்பல் படையணியின் கட்டளைத்தளபதி கெப்டன் டொஷிஹிரோ டகயிவா மற்றும் இரு கப்பல்களின் அதிகாரிகள் கொமாண்டர் சுனிசிரோ மற்றும் லெப்டின்ன்ட் மசனோரி ஆகிய அதிகாரிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படைக் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
மேலும், இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுடன் இச் சந்தர்பத்திற்கு இலங்கைக்கான ஜபானிய துதுவர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசர் மொடொட்ஷுகு ஷிகெகாவா அவர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்போல் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளனர். இக்கப்பல் மார்ச் 14 ஆம் திகதி இலங்கையிலிருந்து செல்லவுள்ளது.