வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம்களில் இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சென்ற 20 திகதி இருந்து இன்று 22 வரை பியகம, வெல்லம்பிட்டி, மல்வானை, மப்பிட்டிகம ஒருகொடவத்த, கடுவெல மற்றும் அவிஸ்ஸாவெல ஆகிய பிரதேசங்களில் மருத்துவ முகாங்கள் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டன. இதேவேளை, 21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்தியக் கடற்படையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மருத்துவ முகாங்களை நடத்தினர்.
இம்மருத்துவ முகாமின் போது சுமார் 2700 மேற்பட்ட மக்களுக்கு இரு நாட்டு கடற்படைகளையும் சேர்ந்த 18 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 70 மருத்துவ உதவியாளர்களால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் ரியர் அட்மிரால் லலித் ஏகனாயக அவர்களின் தலமையின் நடந்த இந் நிகழ்வில் பணிப்பாளர் கடற்படை வைத்திய மற்றும் சேவை கொமதோரு சேனாரூப ஜயவர்தன அவர்கள் வைத்திய கொமதோரு எசஜித் ஜயசிங்க அவர்களுமும் கலந்துகொண்டனர்.