சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 09 பேர் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் 09 பேர் இன்று 19 அதிகாலை 6 மணியளவில் நீர் கொழும்பு பிரதேசத்திலிருந்து 30 கடல்மைல் தொலைவில் மேற்கு கடற்பரப்பில் கடற்படை வேகம் தாக்குதல் பீ 475 மூலம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 5 ஆண்களும்,பெண்ணும்,சிறுமி மற்றும் இரண்டு சிறுவர்கள் அடங்குகின்றனர். “ ரிஷ்னா துவ” என்ற மீன்பிடி படகொன்றிலேயே இவர்கள் முயற்சித்துள்ளுடன் கடற்படையினருக்கு கிடைத்த இரசியத் தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.
“குடிவரவு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக யருக்கும் செல்ல முடியாது. கடத்தல்கார்களை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பவர்கள் தமது உயிர்,பணம் என்பவற்றை இழக்க நேரிடுவதுடன் இறுதியில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாகும் நலையேற்படும். இதைவேளை, இலங்கை கடற்படையினரால்,முன்னெடுக்க’ப்படும் ரோந்து நடவடிக்கை மற்றும் புலனாய்வு பிரிவினரின் தகவல்களை மீறி யாராலும் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முடியாது.