சம்பூரில் பிரதேசத்தில் மேலும் 177 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கும்
 

அதி மேன்ம தகு ஜனாதிபதி அவர்களின் கருதுகோள்கள் மீது சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 177 ஏக்கர் காணி இன்று (25) உத்தியோகபூர்வமாக அவற்றின் உரிமையாளர்களிக்கு கையளிக்ப்பட்டன. இதன்போது 177 ஏக்கர் காணியின் உத்தியோகபூர்வ ஆவணங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கடற்படைத்தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், அரச அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இந்நிகழ்வு நடைபெறுவதற்கு முன் சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் இந்து கோவில் ஆகியவற்றை அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரால் புனரமைக்கப்பட்டது.

சாம்பூர் கடற்படை பயிற்சி நிலையம் 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் இலங்கை கடற்படைக்கப்பல் விதுரவாக 2013 ஆம் ஆண்டு அதிகாரமளிக்கப்பட்டது.மேலும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடற்படையின் வசமிருந்த 237 ஏக்கர் காணிகளில் 60 ஏக்கர் காணி ஏற்கனவே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. எஞ்சிய 177 ஏக்கர் காணி நேற்று கையளிக்கப்பட்டதுடன் சாம்பூர் கடற்படை தளம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.