இரணைதீவு கிறிஸ்தவ ஆலய வருடாந்த பூஜை நிகழ்வுக்கு கடற்படை உதவி
இரணதீவு ரோசரி மாதா கிறிஸ்தவ ஆலயத்தின் வருடாந்த பூஜை நிகழ்வு இலங்கை கடற்படையின் உதவியுடன் பெப்ரவரி 12 ஆம் திகதி (2016) மிக விமர்சையாக நடைபெற்றது. நாச்சாதூவவிற்கு ஆறு கடல் மைல்களுக்கு தொலைவிலுள்ள கடற்படை கப்பல் ‘புவனேக‘ வின் அதிகாரிகள் இந்நிகழ்வினை நடாத்த உதவியளித்தனர். சுமார் 800 பக்தர்கள் கலந்துகண்ட இப்பூஜை சம்பிரதாய சடங்குகளுடன் இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கடற்படையினர், பக்தர்களின் முக்கிய அடிப்படை தேவைகளான சுத்தமான குடிநீர், வைத்திய வசதி, மின்விநியோகம் மற்றும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை வழங்கினர். மேலும் கடற்படை படகுகளும், உயிர் காப்பு குழுக்களும் பக்தர்களின் பட்துகாப்பை உறுதிசெய்ய சேவையில் இடுபடுத்தப்பட்டிருந்தன. இரனதீவு ஒரு ஜன சஞ்சரமற்ற பிரதேசமென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வினை இதுபோன்ற வசதிகளற்ற ஜனசூன்ய பகுதியொன்றில் மிக விமரிசையாக நடாத்த உதவிய இலங்கை கடட்பட்டையினருக்கு பங்கு தந்தையும் வருகை தநத பக்தர்களும் அவர்களது மனங்கனிந்த நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.